அறிவிப்புகள்

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் கால் பதித்தேன். நண்பர்கள்

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் கால் பதித்தேன். நண்பர்கள் Rambo KumarDeepa NagaraniMeena Arunachalam மற்றும் யாஸ்மின் அவர்களுடன் இயக்குனர் Bharathi Krishnakumar அவர்களின் " என்று தனியும்" திரைப்படம் காணச் சென்றேன்.

கவர்ச்சிக் கதாநாயகிகள், அவர்களின் குலுக்கல்கள், கண்டாங்கிச் சேலையோடு கணடாவில் கனவுப் பாட்டு, கதாநாயகனின் டைவ் அடிக்கும் திறமை, அடிக்கடி பஞ்ச் டையலாக் எனும் அவஸ்த்தை போன்றவற்றை எதிர்பார்க்கும் ஒப்பற்ற ரசனையாளரா நீங்கள்?
நில்லுங்கள். நீங்கள் படம் பார்க்கச் செல்லவேண்டாம். இது உங்களுக்கான படமல்ல.
சாதி எனும் சாபத்தால் சிதறும் நம் சமூகத்தை பற்றியும், நமது வருங்கால சந்ததிகள் இச் சிதறளில் சிக்குண்டு போகாமல் வாழவேண்டுமே எனும் அக்கறை உள்ள மனித உள்ளங்களுக்கேயான திரைப்படம் இது.
இத்தகைய களத்தைத் தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு என் வணக்கங்கள்.
திரைப்படத்தில் பெரும்பாலோர் புதியவர்களானாலும் அவர்களது இயல்பான நடிப்பு இயக்குனரின் வெற்றி. குறிப்பாக கதாநாயகனின் அப்பா, அக்கா, அவரது காதலர் ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குரியது.
எந்த ஒரு இடத்திலும் இன்ன சாதி என்பதை குறிப்பிடாதது இயக்குனரின் சமூக அக்கறையைக் காட்டுகின்றது. 
ஏதோ ஒரு சாதியை ஆன்ட சாதியாகக் காட்டும் இன்றைய இயக்குனர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.
வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஆனால் அருவாள்களும், ரத்தச் சிதறல்களும் இல்லை. தப்பு செய்தவன் சாகவேண்டும். சம்காரம் செய்தவன் ஏன் சிறை செல்லவேண்டும்?
சில காட்சிகளை நாம் ஊகிக்க முடிவதால் சில நேரங்களில் தொய்வு. 
பாடல்கள் அருமை. அதே நேரம் காதுவலிதரும் பின்னனி இசை.
கரிசல் மண்ணையும், கருவேலங்காட்டையும் இவ்வளவு அழகாகக் காட்டவேண்டுமென்றால், ஒளிப்பதிவாளர் இந்த மண்ணின் மடியில் உருண்டு புரண்ட ஆன்மாவாக இருக்கவேண்டும், இல்லையென்றால் ஒரு ஞானியாக இருக்க வேண்டும். எந்த ஒரு இடத்திலும காட்சியமைப்பிலிருந்து அன்னியப்படாத அருமையான ஒளிப்பதிவு. 
இயல்பான வசனங்கள்.
படத்தில் சில நேரங்களில் ஏற்படும் தொய்வை போக்க நகைச்சுவை காட்சிகள தந்திருக்கலாம். ஒருவேளை நகைச்சுவை கதையின் சீரியஸைக் குலைத்துவிடும் என்று இயக்குனர் என்னியிருக்கலாம்.
திரைப்படங்களால் சமூகம் சீரழிகிறது எனும் கூற்று மெய்யானால் இத்தகைய திரைப்படங்களின் மூலம் சமூகம் ஓரளவாவது திருந்தட்டும்.
சாதி வெறி கொண்டலையும் மூர்க்கக் கூட்டத்தின் முகத்தில் விசிறியெரியப்பட்ட திராவகம்.

 

© All Rights Reserved

Web Design