அறிவிப்புகள்

என்று தணியும் கடிதங்கள்

சுரேஷ் கடிதம்

suresh-letter

 

தோழமை வணக்கம்.

மூன்று நாட்கள் - ஜனவரி 13, 14, 15 - குருவாயூர், அதிரப்பள்ளி, கோயம்புத்தூர் சென்றிருந்தோம்.

உடன் தாங்களும் வந்திருந்தீர்கள்! (ஆம்! அச்சம் தவிர்)  ரௌத்ரம் பழகி, கூடி தொழில் செய்... வடிவத்தில்)

பிரயாணம் முழுவதும் தங்களைப் பற்றிய பேச்சுதான். அனைவருக்கும் தங்களது உரைவீச்சு பிடித்துப் போய்விட்டது. திரும்பத் திரும்ப போடச் சொல்லி கேட்டார்கள், ரசித்தார்கள், விமர்சித்தார்கள்.

சுகமாய் இருந்தது பரியாணம்.

வீட்டிற்கு வந்தால் - தங்களது கூரியர் கடிதம்…

இன்ப அதிர்ச்சி!

நினைவுப்பரிசு அனுப்பியமைக்கு மிக்க நன்றி!

டிசம்பர் 18ம் சரி, ஜனவரி 11ம் சரி தங்களோடு சரியாக பேச இயலவில்லை. சரியான தலைவலி தான் காரணம். டிசம்பர் 18 விழா சரியான திட்டமிடலுடன், ஒருங்கிணைப்போடு சிறப்பாக நடைபெற்றிந்தது.

 

சிறிய அரங்கில் தனக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு, வாழ்த்து அனைத்தையும் ஒரு மூலையில் அமர்ந்து ரசித்தேன் - தலைவலியுடன்.

ஒரு சில சமயம் என்னையுமறியாமல் கண்ணீர், அந்த அளவிற்கு தங்களது பேச்சில் ஒன்றிப் போனேன்.

படத்தை பற்றி...

விமர்சிகும் அளவிற்கு நான் வளரவில்லை.

இருப்பினும்...

படத்தில் தங்களின் அயராத, கடுமையான உழைப்பு நிறைய இருக்கிறது.

“டைரக்ஷன்” டச் ஆங்காங்கே மிகச் சரியான இடத்தில் பளிச்சிடுகிறது.

மோலோட்டமாக ஒரு விஷயத்தை சொல்லாமல் அதில் நிறைய home work செய்த திறமை மேலோங்கி இருக்கிறது.

இது முதற் படத்திற்கு மட்டுமல்ல தோடர்ந்து எடுக்கப்போகும் அத்தனை படங்களுக்கும் தொடர வேண்டும் என்பது என் அவா.

அது மட்டுமன்றி...

தங்களை எல்லோரும் கூர்ந்து கவனிக்கும் நேரம் இப்பொழுது. வெற்றிப்பாதையின் ஆரம்ப சந்தோஷத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேணடும் என்பதில் கவனமாக இருக்கவும்.

என்றும் தோழமையுடன்

(K. SURESH)

வில்லியனூர்

22.01.06

 

 


 

குன்றக்குடி அடிகளார் கடிதம்

kuntrakudi-letter

தவத்திரு

குனற்க்குடி பொன்னம்பல அடிகளார்

28.11.06

அன்பிற் சிறந்த நமது திருமிகு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கு,

 

எல்லா நன்மைகளும் பெருகத் திருவருளைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்.

கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படத்தைத் தந்த தாங்கள் கும்பகோணம் பள்ளி விபத்தை மையமாக வைத்து என்று தணியும்...? என்ற ஆவணப்படத்தை சமூகத்திற்கு தந்துள்ளது குறித்து பாராட்டுககளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சமூக அவலங்களை அந்தந்த காலக்கட்டங்களோடு மறந்து விடாமலும், மீண்டும் அந்த அவலங்கள் நிகழ்ந்து விடாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனைகளை சமூகத்திற்கு தரும் தங்களின் பணி பாராட்டுக்குறியது.

திரைப்படத்துறையை தங்களின் பிழைப்புக்கு உரிய பணியாக ஏற்றுக்கொள்ளாமல், சமூகத்தின் பிழை களையும் பணியாக ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வரும் தாங்கள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகின்றோம்.

என்று வேண்டும் இன்ப அன்பு

பொன்னம்பல அடிகளார்

 

© All Rights Reserved

Web Design